மலரே !!!
நிலவை விலை பேசும் உலகம் இது !!!
பூஞ்சோலை கேட்கும் ஓர் பாலைவனம்
இங்கு உரசிக்கொண்டிருக்கிறது
ரணம் கண்ட மனதோடு !!!
காட்டாரில் அடித்து செல்லும்
ஓர் ஓடம் போல்
நேரம் தறிகெட்டு ஓடும் இவ்வுலகில் ,
இறைவனின் தீர்ப்பை மீறி
இயற்கையை எதிர்த்து
மனம் போன போக்கில் செல்லும்
இந்த நிழலை எதிர்த்து
தடை போடும்
ஒரு உயிரின் அலறள் இது !!!

உரிமை கொண்டதன் எதிரொலியாக
என் செயல்களுக்கு சாயம் பூசி
கபட நாடகம் அரங்கேற்றும் காட்சிகள் கண்டேன் !!!
மரியாதை என்னும் பொருளை
காற்றிலே பறக்க விட்டவன் என
குற்றம் சுமத்தும் மனிதர்கள் இங்கே !!!
புரிந்து கொள்ள மறுக்கும் மனம்
எதனை ஏற்கும் ???
ஒரு கணம் சிந்திக்க சொல்லுங்கள் !!!
புரிய மறுத்தாள் -
மாற்றி கொள்கிறேன்……
என் மனதை !!!

உறவுகளுக்கு உயிர் ஊட்ட
பாசம் உண்டு !
இடையூறுகளை கலைக்க
அன்பு உண்டு !
அதில் சிக்கி தவிக்கும் மனங்களுக்கு
ஒரே தூணாய் நட்பு உண்டு !!!
அது உண்மையாய் உள்ள வரை !!!
மீறும்போது
மேற்கூறிய இரண்டும்
உயிரற்று போகுமே !!!

நட்புக்கு இலக்கணம் என்று கூறியவள் !!!
இன்றோ இலக்கிய பிழைகளை
ஆராய்கிறாள் !!!
அவளாக வந்தாள் !!!
இன்று தேள் போல சென்றாள் !!!
வார்த்தைகளை கொட்டி விட்டு !!!
கால மாற்றம் -
அவளையும் விட்டு வைக்க வில்லையே !!!

ஏதோ நினைப்பில் சாலையில் சென்று கொண்டிருந்தேன்
நண்பர்களுடன்…
மக்கள் கூட்டம் அலை மோதிய அந்த சிறு சாலையில் என் இரு விழிகள் யாரோ அழைத்ததை உணர்ந்து சுற்றும் முற்றும் பார்க்க முடிவெடுத்து அந்த ஓசை வந்த திசையை நோக்கி படம் பிடிக்க முயன்றது..
யாரென்று பார்ப்பது…
இது வரை கண்டிராத முகம்…
என்னுள் ஏதோ பயம் வேறு…
என்ன செய்ய
திரும்பாமல் பார்க்காமல் சென்று விடலாமா…
போகவும் மனமில்லை…
ஒரு ஈர்ப்பு.. பார்த்தே ஆக வேண்டும் என்று…
பயத்தை சற்று ஓதுக்கி வைத்து விட்டு திரும்பினேன்… சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு பெண் போலீஸ் என்னை அழைக்கிறது….
மனம் அலற ஆரம்பித்தது…
ஏன் என்னை அழைக்க வேண்டும் என்று.???
நான் என்னென்னவோ நினைத்து இருந்தேன்.. அக்குரல் யாராக இருக்குமோ என்று ???
சிறு கனவு உலகத்திற்க்கும் சென்று வந்தேன் அந்த இடை பொழுதில்.. அனைத்தும் மேக கூட்டம் கலைந்தது போன்று கலைந்து போனது… நான் ஒன்றும் செய்ய வில்லையே.. ஏன் என்னை அழைத்தார்கள்.???
.. என்னை நெருங்கி வந்த அந்த பெண் போலீஸ் என் சட்டை காலரை பிடிப்பது போல் வந்தார்கள்..
பயம் என்னையும் மீறி கண்களில் கண்ணீரை வர வழைத்தது.. என்ன நடக்குமோ என துடித்த நெஞ்சம்
ஒரு கணம்… அமைதியாய்… நன்றி என கூறியது…
ஏன் ???
அந்த போலீஸ் சொன்ன வார்த்தைக்கு. !!!
சைடு ஸ்டாண்டு எடுத்து விட்டு போ பா !!!..
விழுந்து விட போற பார்த்து போ !!!
என்று கனிவோடு கூறியதை கேட்டு !!!

என்னடா இவன் இவ்ளோ ரவுசு பண்ணானே !!!
ஏதா அழகான பொண்ணா பார்த்தனு சொல்லுவானு எதிர் பார்த்திருப்பீங்க… அது வேற… அது பொய்யா இருக்கும்.. இது தான் உண்மை… பொய் கொஞ்சம் கவர்ச்சியா தான் இருக்கும்.. ஆனா உண்மைக்கு அது இல்லை ..

இருந்தாலும் படித்ததற்கு மிக்க மிக்க நன்றி !!!

உன்னை சுற்றி ஓர் உலகம் !!!
சுழன்று கொண்டிருக்கிறது !!!
வேதனைகளையும் சோதனைகளையும் சுமந்து கொண்டு !!!
இறக்கி வைத்து விட முயலாதே !!!
உன் வாழ்வு அர்த்தமில்லாமல் போய்விடும் !!!
அதனையும் சேர்த்து கொண்டு வாழ முயற்சி செய் !!!
வாழ்வின் பொருளை உணர்வாய் !!!
துரை

நிழல்கள் என்னை பின் தொடர
நினைவுகள் எங்கோ உலாவிக்கொண்டிருக்கிறதே !!!
நினைவுகளை சுமையாய் கருதியதாளோ என்னவோ??
தவறுதான் !!!
மன்னித்து வீடு !!!
உன்னையும் சுமக்கிறேன் !!!
ஆனால் ஒரு நிபந்தனை !!!
என்னை உறங்க விட வேண்டும் !!!
துரை

கனவுகள் காண அனுமதி கொடு…
எங்கோ தறிகெட்டு ஓடும்
ஒரு ஓடமாக இல்லாமல்
தெளிந்த நீரில் பாயும்
ஒரு காகித கப்பல் போல்
தற்காலிகமாக என் வாழ்வை வாழ
அனுமதி கொடு
இந்த இனிய இரவில்
என் கனவுகளும் வாழட்டும்
சில நொடி பொழுது !!!

கண்கள் சந்தித்தன !!!
இமை கவிழ்த்து குனிந்து கொண்டேன் !!!
நாணமோ என்னவோ ???
எல்லாம் என்னவள் வந்த விளையாட்டு!!!
மனம் குளிர கண்டேன்!!!
பேச மனமின்றி சென்றேன்!!!
துரை

நிஜங்களை
நான்
மறக்க நினைக்கையில்
நிழல்கள்
என்னை நீங்க மறுக்கும்
இந்த வினோத பிணைப்பு
என் கனவுகளுடன் கை கோர்த்து
தூக்கத்தை விலை பேசும்
காட்சிகள் இங்கே !!! துரை

« முந்தைய பக்கம்அடுத்த பக்கம் »