the feel


நிழல்கள் என்னை பின் தொடர
நினைவுகள் எங்கோ உலாவிக்கொண்டிருக்கிறதே !!!
நினைவுகளை சுமையாய் கருதியதாளோ என்னவோ??
தவறுதான் !!!
மன்னித்து வீடு !!!
உன்னையும் சுமக்கிறேன் !!!
ஆனால் ஒரு நிபந்தனை !!!
என்னை உறங்க விட வேண்டும் !!!
துரை

கனவுகள் காண அனுமதி கொடு…
எங்கோ தறிகெட்டு ஓடும்
ஒரு ஓடமாக இல்லாமல்
தெளிந்த நீரில் பாயும்
ஒரு காகித கப்பல் போல்
தற்காலிகமாக என் வாழ்வை வாழ
அனுமதி கொடு
இந்த இனிய இரவில்
என் கனவுகளும் வாழட்டும்
சில நொடி பொழுது !!!

கண்கள் சந்தித்தன !!!
இமை கவிழ்த்து குனிந்து கொண்டேன் !!!
நாணமோ என்னவோ ???
எல்லாம் என்னவள் வந்த விளையாட்டு!!!
மனம் குளிர கண்டேன்!!!
பேச மனமின்றி சென்றேன்!!!
துரை

நிஜங்களை
நான்
மறக்க நினைக்கையில்
நிழல்கள்
என்னை நீங்க மறுக்கும்
இந்த வினோத பிணைப்பு
என் கனவுகளுடன் கை கோர்த்து
தூக்கத்தை விலை பேசும்
காட்சிகள் இங்கே !!! துரை

குற்றம் என தீர்ப்பு அளித்தாய் !
இனி எங்கு முறையிடுவேன் !
நான் நேசித்தது உண்மை என !
திருடிய இதயமும் திருட்டு போனதே !
ஐயோ!
ஆயுள் தண்டனை கைதியாய் இன்று !!!
துரை !!!

கவிதைகளை

                                                                     சரளமாய் தொடுததவன் நான் !!!
                                                                                        இன்றோ ஒவ்வொரு வார்த்தைகளும் தடம்புரண்டு

அவள் பெயரை மட்டுமே
உதிர்க்கின்றன!!!
கொன்றவள் சிறைசாலை !!!
நானோ குற்றவாளி ??? 
                                           
துரை

  • footprnt.jpg  footprnt.jpg
    • என் வாழ்வின் பதிப்புகள் நாளைய பொழுதை நோக்கி !
      என்னவள் பக்கங்களை படித்து பார்க்கிறாள் !
      ஏனோ ஒரு பிடிப்பு இல்லை அவளிடத்தில் !
      ஏதேனும் பிழை இருந்திருக்கும் போல !
      அதனாலென்ன ???
      என் வாழ்வு விடிவதும் மறைவதும் அவள் விரல் நுனியில் !
      பக்கங்களின் எண்ணிக்கை குறைய குறைய
      என் நாட்களின் எண்ணிக்கையும்
      குறைகிறதோ???
      துரை

என் விழியில் ததும்பும் கண்ணீர் அவள் !!!

என்னில் ஊற்று எடுப்பவள்!!!

 கலையாத கனவுகளாய்

அவள் மனதை மட்டுமே யாசிக்கும்

உயிர் கலைஞன் ஆக

அவள் அன்பு சேவகன்!!!

                                                                                                                       துரை

என் மனதிலே உள்ள காயங்கள்

பூ பூத்து சிரிக்கின்றன!

தகுதியற்ற இடத்தில் மலர்வதென்ன?

 பிடுங்கி எறிந்து விடு!

பூங்காவனத்தில் ஓர் பாலைவன முள்!

                                                                                         

என் கதையின் கவிதை !

மனதிலே ரகசியம் இருக்கிறது!

 அது இதழீநில் தவழ்ந்திட துடிக்கிறது!

 சிரிக்கும் நான் பொய் உணர்வு!

நடத்தும் நான் பகல் கனவு!

                                                                                  

« முந்தைய பக்கம்