the feel


rockfm4.jpgகாகிதங்களில் உன் வாசகம் !!!
கிழிந்து போனது !!!
எனது தேகத்தில்
நான் எழுதிய வாசகங்களோ -
காவியம் ஆனது !!!
என் சரித்திரம் சொல்கிறது -
நான் சித்திரம் என்று !!!
சிந்திக்க கற்றுக்கொண்டதால் !!!
துரை

dsc00018.jpgஉன்னில் எதிர்பார்த்து
ஏமாந்தது தான் மிச்சம் !!!
நாட்களை வீணாக கடத்தியதற்கு-
கிடைத்தது ;
முகத்தில் சற்று நீளமாய் வளர்ந்த முடி மட்டுமே
!!!

waverck3.jpgஒரு நிலையின்றி
வந்த உறவுக்கு
கரம் நீட்டி வரவேற்று
சவ குழியில் அமர்த்தி
அலங்கரித்து
காதல் பாடும்
இலஞ்சிட்டு தென்றலென
சூறாவளியாய் சுழன்று வரும்
மென் முகம் கொண்ட
பெண்ணினமாம் என் கவிதைகளின் தேடல் அவள்
!!!

வலிகளின் வலிகளின் கூடாரத்தில்
ஒரு சிறு துவாரத்தில்
நான் கண்ட குழந்தை நீ !!!
என்னில் கலங்கியதை நான் மறவேன் !!!
உன் விடியல் வேண்டி
அஸ்த்ம்னத்தை பகைத்தவன் ,
இன்றோ ???
உன் ஆஸ்தான வசனங்களினால்
பசூபம் என சாய்வதை நீ அறிவாயோ ???
வேள்வியின் விளிம்பில் நான் !!!
மனம் போகும் வழியில் நீ !!!
உன் பாதையின் விழியாய்…
என்றும் அன்புடன் துரை

suset.jpgsuset.jpgஎன் புதுச்சேரி !!!
அகிலத்தின் ஒளி விளக்கு புதுச்சேரி !!!
வான் நிறமாய் கடற்கரையும்
எழில் கொஞ்சும் பூங்காவும்
ஒளி விளக்கின் எரி பொருளாம் !!!

சாலையோரம் நிழல் மரமும்
பூத்து குலுங்கும் வெண் மலரும்
ஒளி விளக்கின் சாயங்கலாம் !!!

சுற்றுலாவின் அடித்தலம் போல்
மாட்திரி மந்திரின் தனித்துவமாய்
மக்கள் மனதில் ஊற்றெடுக்கும்
புதுவை எனும் தேண்துளியாம் !!!

அமைதி என்ற சொல்லுக்கு
விளக்கம் தரும் அகராதி
அரவிந்தரின் ஆசிரமம் !!!

பழமை கொண்டு பெருமை பெறும்
புதுமை வாய்ந்த பதுமையாய்
மின்னி தவழும் இன்ப புதுவை !!!

என் கனவே !!!
மின்னலென மின்னி விட்டு
மாயமாய் மறைந்ததென்ன !!!
வந்த சில நிமிடத்திலே
என் உயர்வை நீ காட்டினாய் !!!
உறக்கத்தினில் நீ புகுந்து
எந்தன் கோலமும் மாற்றினாயே !!!
நிஜமாய் மாறும் பட்சத்தில்
எனை எழுப்பி விட மறவாதே !!!

sunset14.jpgsunset14.jpgஎன் உறவின் உயிரே !!!
தென்றல் ஒன்று
கோபம் கொண்டு வந்தது போல்
என் மனதை
நீ கலைந்து சென்றதென்ன ???
உன் பிரிவை
நான் ஏற்கும் தருணத்திலும்
உன் பெயரை
என் உயிர் சுவாசிக்குமே !!!
வாழ்வின் மூச்சே -
என் வாழ்வின் திரையில்
நீ ஓர் தொடர்கதையாய்
!!!

மலரே !!!
நிலவை விலை பேசும் உலகம் இது !!!
பூஞ்சோலை கேட்கும் ஓர் பாலைவனம்
இங்கு உரசிக்கொண்டிருக்கிறது
ரணம் கண்ட மனதோடு !!!
காட்டாரில் அடித்து செல்லும்
ஓர் ஓடம் போல்
நேரம் தறிகெட்டு ஓடும் இவ்வுலகில் ,
இறைவனின் தீர்ப்பை மீறி
இயற்கையை எதிர்த்து
மனம் போன போக்கில் செல்லும்
இந்த நிழலை எதிர்த்து
தடை போடும்
ஒரு உயிரின் அலறள் இது !!!

உரிமை கொண்டதன் எதிரொலியாக
என் செயல்களுக்கு சாயம் பூசி
கபட நாடகம் அரங்கேற்றும் காட்சிகள் கண்டேன் !!!
மரியாதை என்னும் பொருளை
காற்றிலே பறக்க விட்டவன் என
குற்றம் சுமத்தும் மனிதர்கள் இங்கே !!!
புரிந்து கொள்ள மறுக்கும் மனம்
எதனை ஏற்கும் ???
ஒரு கணம் சிந்திக்க சொல்லுங்கள் !!!
புரிய மறுத்தாள் -
மாற்றி கொள்கிறேன்……
என் மனதை !!!

உன்னை சுற்றி ஓர் உலகம் !!!
சுழன்று கொண்டிருக்கிறது !!!
வேதனைகளையும் சோதனைகளையும் சுமந்து கொண்டு !!!
இறக்கி வைத்து விட முயலாதே !!!
உன் வாழ்வு அர்த்தமில்லாமல் போய்விடும் !!!
அதனையும் சேர்த்து கொண்டு வாழ முயற்சி செய் !!!
வாழ்வின் பொருளை உணர்வாய் !!!
துரை

அடுத்த பக்கம் »